தமிழ்நாடு

திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில் அதிநவீன AI இருதய கேத் லேப் மையம்: அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் திறந்து வைத்தனர்!

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பிரபல ரேவதி மெடிக்கல் சென்டரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இருதய கேத் லேப் (Cath Lab) சிகிச்சை மையத்தின் திறப்பு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

இப்புதிய அதிநவீன சிகிச்சை மையத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. K.G. அருண் ராஜ் ஆகியோர் இணைந்து முறைப்படி திறந்து வைத்தனர். நவீன ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இருதயக் கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிக்க இந்த கேத் லேப் பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி V. சத்தியபாமா, திரு. பாலமுருகன், திரு. ராம்குமார் மற்றும் திரு. என்.எஸ்.என். நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தொழில்துறை சார்பில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைவர் திரு. சோழா அப்புக்குட்டி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு. கே.எம். சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழில்முனைவோர் மற்றும் மருத்துவக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த இருதய அவசர சிகிச்சைகளை எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தொடர்ந்து உயரிய மருத்துவ சேவைகளை வழங்கி மருத்துவத் துறையில் மென்மேலும் சிறந்து விளங்க ரேவதி மெடிக்கல் சென்டருக்கு அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

English summary: A new AI-enabled cardiac cath lab at Revathi Medical Centre in Tiruppur was inaugurated by Revenue and Disaster Management Minister K.A. Sengottaiyan and Health Minister K.G. Arun Raj. According to the report, the facility is meant to help detect heart conditions accurately and provide immediate treatment. MLAs, the centre’s chairman Dr. Eswaramoorthy and representatives of industry associations attended.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன