புதுச்சேரி

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாத இலவச அரிசி பணம் ₹122.91 கோடி வரவு: குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!

புதுச்சேரி, நவ. 05: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கு பதிலாக, அதற்குரிய ரொக்க மதிப்புத் தொகையான ஆறு மாதங்களுக்கான ரூ.122.91 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு மாற்றாக நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் (DBT) வாயிலாக நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் என். ரங்கசாமியின் உத்தரவின்படியும், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து வழிகாட்டுதலின்படியும், மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான ஆறு மாதங்களுக்கான ரொக்க உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள BPL (AAY/PHH) குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசிக்கு மாற்றாக ரூ.860 வீதமும், APL (Non-PHH) குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசிக்கு மாற்றாக ரூ.430 வீதமும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்திற்கான மொத்தத் தொகையான ரூ.122.91 கோடி, தகுதியுடைய அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளிலும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary: The office of Puducherry’s Civil Supplies and Consumer Affairs Minister announced that Rs 122.91 crore has been credited to beneficiaries’ bank accounts in place of free rice for the six months from March to August 2026. The payment is made through direct benefit transfer, at Rs 860 a month for BPL cardholders (in place of 20 kg of rice) and Rs 430 a month for APL cardholders (in place of 10 kg). The release was made as per the orders of Chief Minister N. Rangasamy and the guidance of Minister V.P. Sivakolundhu, the report said.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன