புதுச்சேரி

புதுச்சேரி ஆசிரியர்களுக்கு நற்செய்தி: 2-வது சிறப்பு TET தேர்வுக்கு விண்ணப்பிக்க TRB அனுமதி!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தவுள்ள 2-வது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை (Special TET) நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியான ஆசிரியர்களும் கலந்துகொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பின்படி, புதுச்சேரி அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். குறிப்பாக பணியில் உள்ள ஆசிரியர்களின் தகுதியை உறுதிசெய்யும் விதமாக இச்சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூடுதல் விபரங்கள், தகுதி வரம்புகள் மற்றும் தேர்வு அட்டவணை ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன