புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி: தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவிப்பிரகாஷ் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் உரிய படிவங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் துறை வெளியிட்டுள்ள தகவலில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6A ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அல்லது ஆட்சேபனை தெரிவிக்க படிவம் 7, முகவரி மாற்றம், திருத்தங்கள், மாற்று வாக்காளர் அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளாகப் பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கு படிவம் 8 மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்காளர் சேவை இணையதளம் (https://voters.eci.gov.in) அல்லது ‘ECINET’ கைபேசி செயலி வாயிலாக இணையவழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு ‘1950’ என்ற வாக்காளர் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் பொதுமக்கள் தங்களது விவரங்களைச் சரிபார்த்து உரிய காலத்திற்குள் கோரிக்கைகளை அளிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன