சென்னையில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்: லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ஜல்லிக்கட்டு நலச்சங்கம் ஒருங்கிணைப்பு!

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டும் பாரம்பரிய அடையாளமுமான ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. லட்சிய ஜனநாயக கட்சி (LJK) மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் கவுரவத் தலைவருமான செந்தில் தொண்டைமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன் லட்சிய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் முன்னணிப் பொறுப்பாளர்கள் மேடையில் அமர்ந்து ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் ஒண்டிராஜ், துணைத்தலைவர் சாலை சக்கரபாணி மற்றும் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வது, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் நலன்களைப் பாதுகாப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குபடுத்துதல், கிராமப்புறங்களில் பாரம்பரியம் மாறாமல் போட்டிகளை நடத்துவது மற்றும் எதிர்காலத் தலைமுறைக்கு இந்த வீர விளையாட்டின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
English summary: A consultative meeting on conducting Jallikattu events safely and well was held in Chennai, organised by the Lakshiya Jananayaga Katchi (LJK) and the Jallikattu Protection Welfare Association. Senthil Thondaiman, president of the Ceylon Workers Congress, attended as special guest, and association president Ondiraj, vice-president Salai Chakrapani and secretary Raja were present. Regulating the events, protecting bull tamers and bulls, and preserving tradition were discussed.

