புதுச்சேரி

புதுச்சேரி–தமிழ்நாடு மாணவர்களுக்கு ரூ.32.23 லட்சம் கல்வி உதவி: மார்டின் அறக்கட்டளை, லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்த முயற்சி

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை, எளிய பின்னணியில் இருந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவியரில் 80க்கும் மேற்பட்டோருக்கு, மார்டின் அறக்கட்டளை சார்பில் ரூ.32 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவருமானவரின் வழிகாட்டுதலின் கீழ், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எல்.ஜே.கே. நிர்வாகப் பொதுச் செயலாளர் ராம்குமார், பொதுச் செயலாளர் டாக்டர் துரைசாமி, மாநிலச் செயலாளர் ரவி ராஜாராம், மூத்த ஆலோசகர் ஜெ.ஜெ. ஜெயசங்கர், காமராஜ் நகர் தொகுதி எல்.ஜே.கே. தலைவர் கோகுல கண்ணன், காமராஜ் நகர் குறைதீர் குழுப் பொறுப்பாளர் முகமது ஷஜிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

நிகழ்வில் Space Zone India நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆனந்த் மேகலிங்கம் பங்கேற்று, மாணவர்-மாணவியரிடம் ஊக்கமூட்டும் உரையாற்றினார். “சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், கல்வியால் வாழ்க்கையை மாற்றலாம்; நீங்கள் கனவு காணத் தயங்க வேண்டாம், அதற்காக உழைக்கத் தயார் ஆக வேண்டும்” என்று அவர் பேசினார்.

English summary: The Martin Foundation gave education scholarships worth Rs 32.23 lakh to over 80 school and college students from poor backgrounds in Puducherry and Tamil Nadu, at the Latchiya Jananayaga Katchi headquarters in Reddiarpalayam, under the guidance of the party leader and Kamaraj Nagar MLA. LJK leaders attended, and Space Zone India founder and CEO Anand Megalingam gave a motivational talk saying education can change one’s life.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன