புதுவையில் 10 சுருக்கெழுத்தர்களுக்கு தனிச்செயலாளர்களாக பதவி உயர்வு மற்றும் அதிகாரிகள் இடமாற்றம்
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுவையில் கிரேட் ஒன் சுருக்கெழுத்தர்களாக பணியாற்றி வந்த 10 பேர் தனிச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்புச் செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், கிரேட் ஒன் சுருக்கெழுத்தர்களாக பணியாற்றி வந்த 10 பேருக்கு தனி செயலாளர்களாக நிரந்தர அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊதிய அட்டவணையின் நிலை ஏழில் உள்ள ஊதியமும் விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத்துறையில் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த சரளா போக்குவரத்து துறைக்கும், வணிக வரித்துறையில் பணியாற்றிய திருக்குமரன் புதுச்சேரி தலைமை செயலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், வணிக வரித்துறைக்கு பத்மாவதியும், ஊரக வளர்ச்சி இயக்ககத்திற்கு பிரபாகரனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல 15 கீழ்நிலை பிரிவு எழுத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary: Ten Grade I stenographers in Puducherry have been promoted permanently as private secretaries, with pay at Level 7 of the pay matrix and permitted allowances, according to a memorandum from under-secretary Murugesan of the Personnel and Administrative Reforms department. Several officials were also transferred, including Sarala, a private secretary in industries and commerce, to the transport department, and Thirukumaran of commercial taxes to the Puducherry secretariat. Fifteen lower division clerks were also transferred.