புதுச்சேரியில் 11வது மாநில அளவிலான பெத்தாங் போட்டிகள் – வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரியில் 11வது மாநில அளவிலான பெத்தாங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நேதாஜி அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகளின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரை மணலில் நடைபெற்றது. இதில் நேதாஜி அணி முதலிடத்தையும், கேஆர்இயுடபிள்யூஏ அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசலிப்பு விழாவில், புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரெஞ்ச் தூதர் எத்தியன் ரோலன்ட் பியக் மற்றும் மாநில பாஜக தலைவர் வி.பி. ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழப்பினர். இந்நிகழ்ச்சியில் சப்தகிரி குரூப் இணை இயக்குனர் டாக்டர் விஜய் ஆனந்த், தமிழக வெற்றிக்கழக பிரமுகரும் வழக்கறிஞருமான சசிபாலன், பாஜக வல்லுனர் பிரிவின் மாநில அமைப்பாளர் நாகராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


