தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல மேலும் 3 மாதங்கள் தடை: குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

நாகர்கோவில்: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு உடைக்கற்கள், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை கொண்டு செல்வதற்கான தடை உத்தரவு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், கனிம வளங்கள் அனுமதியின்றி பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு உடைக்கற்கள், ஜல்லி மற்றும் பாறைத்தூள் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான தடை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இத்தடை உத்தரவை மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல அடுத்த 3 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், குமரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் புவியியல்-சுரங்கத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி கனிமங்களை கடத்த முயலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

English summary: Kanniyakumari District Collector Pratap announced that the ban on transporting stone, gravel and other mineral resources from Tamil Nadu to Kerala has been extended by three more months. Revenue, police and geology and mining officials have been asked to step up checks at border check posts. The district administration warned that vehicles trying to violate the ban will be seized and legal action taken.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன