புதுச்சேரி
சாலைகளில் தேங்கிய நீரை அகற்றி பள்ளங்களை நிரப்பிய போக்குவரத்து காவல் துறையினர்
புதுச்சேரி, அக்டோபர் 27: தொடர் மழையின் காரணமாக பிரதான சாலையில் அதிகளவில் நீர் தேங்கி பெரிய பள்ளங்கள் உருவானதால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து அபாயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தெற்கு போக்குவரத்து காவல் துறையினர் முன்முயற்சி எடுத்து, ஒரு பொக்லைன் இயந்திரம் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் உதவியுடன் சரளை மற்றும் ஜல்லி கற்களைக் கொண்டு சாலைப் பள்ளங்களை நிரப்பினர்.
மேலும் வாலிகளைப் பயன்படுத்தி தேங்கிய தண்ணீரை வெளியேற்றியதுடன், அப்பகுதியில் தடுப்புகளை அமைத்து எந்தவொரு விபத்தும் நேராதவாறு போக்குவரத்தைச் சீராக ஒழுங்குபடுத்தினர்.


