புதுச்சேரி

கிருமாம்பாக்கத்தில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

புதுச்சேரி, அக்டோபர் 28: கிருமாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கன்னிய கோவில் அருகே மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி கடலூர் சாலை பச்சைவாழியம்மன் கோவில் அருகே மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி காவலாய்வாளர் சண்முக சத்யா தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற இருவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

காவல் நிலையம் அழைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பாகூரை சேர்ந்த ஜெயகுமார் மற்றும் பசுபதி என்பதும், பணத்திற்காக பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 570 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

English summary: Police in Kirumampakkam, Puducherry, arrested two young men from Bahour for allegedly selling cannabis to the public and college students near the Kanniya Koil area. Acting on a tip-off, a team led by Assistant Sub-Inspector Shanmuga Sathya caught them trying to flee and seized 570 grams of cannabis. They were produced in court and lodged at Kalapet Central Prison.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன