புதுச்சேரி

புதுச்சேரியில் ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கத்தின் 100வது விஜயதசமி ஆண்டு நிறைவு மற்றும் அணிவகுப்பு ஊர்வளம்

புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரியில் ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கத்தின் 100வது விஜயதசமி ஆண்டு நிறைவு விழா மற்றும் 101வது துவக்க விழா நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை சில்க்ஸ் எதிரில் சுயம் சேவகர்களின் அணிவகுப்பு ஊர்வளம் துவங்கி அண்ணா சாலை, நேரு வீதி, செஞ்சி சாலை வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதுச்சேரி மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். புதுச்சேரி தலைவர் தாபோதரன் முன்னிலை வகித்த இந்நிகழ்வில், அறிவுசார் பிரிவின் பொறுப்பாளர் நீலகண்டன் சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது அவர் பாரத சரித்திரத்தின் நீண்ட நெடிய வரலாற்றையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கால தன்னலமற்ற சேவையைப் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் மக்கள் ஒற்றுமையே தேசத்தின் சக்தி என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜாக மாநில தலைவர் ராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் சுயம் சேவகர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்ட செயலாளர் செந்தில் விஸ்வநாதன் வரவேற்றுப் பேசினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன