ஈரானை முழுமையாக அழிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
சென்னை, நவம்பர் 7: அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், ஈரானுக்கு எதிராக முழு வீச்சிலான ராணுவ தாக்குதலை நடத்தி எஞ்சிய ஈரானையும் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவுடன் அதிபர் டிரம்ப் நேற்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஈரான் மீது புதிய பெரும் தாக்குதல்களை தொடங்குவதா, பொருளாதார அழுத்தங்களை தீவிரப்படுத்துவதா அல்லது தூதரக ரீதியான உடன்படிக்கையை எட்டுவதா என அவர் விவாதித்தார். பின்னர் தேவைப்பட்டால் முழு வீச்சிலான ராணுவ தாக்குதலை தொடுத்து எஞ்சிய ஈரானையும் அழித்துவிடுவோம் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே, மீண்டும் அமெரிக்கா தாக்குதலில் இறங்கினால் மிக மோசமான பதிலடி தரப்படும் என்றும், தூதரக கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிடும் என்றும் ஈரான் உச்ச தலைவர் கமேனி திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.


