புதுச்சேரி

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா: ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்!

புதுச்சேரி, நவ. 04:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை நேரில் பாராட்டி கௌரவிக்கும் பிரம்மாண்ட பாராட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் கலந்துகொண்டு, அதிக மதிப்பெண் குவித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி பாராட்டுகிறார்.

மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், அடுத்தகட்ட இலக்குகளை அடையவும் வழிகாட்டும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்வில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன