புதுச்சேரி

தீபாவளியை ஒட்டி புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக் கட்டணம் கிடுகிடு உயர்வு

புதுச்சேரி, நவம்பர் 7: நாடு முழுவதும் நவம்பர் எட்டாம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் ரயில்களில் முன்பதிவு செய்த நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. சிறப்பு ரயில்களிலும் இதே நிலையே நீடிக்கும் சூழலில், புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடி ரயில் சேவையும் கிடையாது. இதனிடையே தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தீபாவளியைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர்.

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரைக்குச் செல்ல ரூ.600 முதல் ரூ.3,800 வரையிலும், நெல்லை, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு ரூ.1,600 முதல் ரூ.4,500 வரையிலும், தென்காசிக்கு ரூ.1,200 முதல் ரூ.2,400 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன