தேசியம்

வங்கக்கடலில் நாளை உருவாகிறது அர்ணா புயல் விசாகப்பட்டினத்திற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு

சென்னை, அக்டோபர் 25: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ள நிலையில், நாளை அர்ணா புயல் உருவாகிறது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் விசாகப்பட்டினத்திற்கு அருகே வரும் 28 ஆம் தேதி அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒடிசா கடலோர மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், இரு மாநில மீனவர்களும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன