தமிழ்நாடு

செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கில் நகை பணத்துக்காக கடத்தப்பட்டாரா என சிபிசிஐடி விசாரணை

செஞ்சி, அக்டோபர் 28: செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கில், நகை மற்றும் பணத்துக்காக கொள்ளையடிக்க வந்தவர்களால் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, காணாமல் போன சிறுமியின் அக்கா படித்து வரும் கல்லூரிக்கு சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

முன்னதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் சிபிசிஐடி எஸ்பி வேல்முருகன் தலைமையில் கூடுதல் விசாரணை அதிகாரி விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன