தமிழ்நாடு
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 8 முதல் நாகர்கோவில் மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை, அக்டோபர் 28: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் மற்றும் கோவி போத்தனூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
நவம்பர் 8-ம் தேதி முதல் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்கள் விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், சென்னை எழும்பூரில் இருந்து கோவை போத்தனூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் திருவள்ளூர், அரக்கோணம், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக செல்லும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.