புதுச்சேரி

ஊசூடு தொகுதியில் ரூ.43.22 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க பூமி பூஜை

புதுச்சேரி, அக்டோபர் 28: ஊசூடு சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் ஐந்து இடங்களில் ரூ.43.22 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஊசூடு தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம், துத்திப்பட்டு, தொண்டமானத்தம், கூடப்பாக்கம் மற்றும் கோடப்பாக்கம் பேட் ஆகிய பகுதிகளில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்டம் மூலம் இதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு, புதுச்சேரியை சேர்ந்த கிரியேட்டிவ் அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

கூடப்பாக்கம் ஆர்சி 16 சாலையில் அரிசி ஆலை தெரு அருகில், பிள்ளையார்குப்பம் ஸ்ரீஹரி சாமில் அருகில், தொண்டமானத்தம் ரங்கசாமி நகர் அருகில் மற்றும் துத்திப்பட்டு, கூடப்பாக்கம் பேட் ஆகிய இடங்களில் இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஊசூடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவி பொறியாளர் ஜலீல், இளநிலை பொறியாளர் தேவர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கிராம பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன