புதுச்சேரி

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கன்னியர்கோவில் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

புதுவை கடலூர் சாலை பச்சைவாழியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தப்பியோட முயன்றவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய சோதனையில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பாகூரை சேர்ந்த ஜெயகுமார் மற்றும் பசுபதி என்பது தெரிய வந்தது. பணத்துக்காக பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்த 570 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன