புதுச்சேரி
காரைக்காலில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மற்றும் மக்களின் குறைகளை அமைச்சர் ராஜவேலு ஆய்வு
காரைக்கால், அக்டோபர் 30: காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதிகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு இரண்டு நாள் பயணமாக நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோயில்பத்து, கீழகாசாக்குடி, திருநல்லாறு மற்றும் நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளுக்குச் சென்ற அவர், மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கல்வி உதவித்தொகையை அடுத்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
