புதுச்சேரி
காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம்
காரைக்கால், அக்டோபர் 30: காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள அதானி தனியார் துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் மக்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக காரைக்கால் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை ஆண்டிற்கு 21.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 103 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தும் திட்டத்தால் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என குழுவின் வழிகாட்டும் குழு தலைவர் சுவாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் காரைக்காலின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டவும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
