புதுச்சேரி
உழவர்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற அன்னாபிஷேக விழா
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி உழவர்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஐப்பசி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் மாலை ஐந்து மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.