புதுச்சேரி

காரைக்காலில் கூட்டுறவு சங்கம் சார்பில் தீபாவளி சிறப்பு பட்டாசு கடை தொடக்கம்

காரைக்கால், அக்டோபர் 27: காரைக்காலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பட்டாசு கடையை வேளாண் துறை அமைச்சர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மைய கூட்டுறவு விற்பனை மற்றும் விநியோக சங்கம் சார்பில் இந்த தீபாவளி சிறப்பு பட்டாசு கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளான் துறை அமைச்சர் ஆதிசேகரன் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தரமான பட்டாசுகள் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கடை தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த திறப்பு விழாவில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன