புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி கேக் மிக்சிங் விழாவைத் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி, நவம்பர் 7: புதுச்சேரி எஸ்.கே.ஐ. சிவா கவி ஐகானிக் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை வரவேற்கும் வகையில் பாரம்பரிய கேக் மிக்சிங் விழா நடைபெற்றது. இவ்விழாவை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஹோட்டல் நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்துகொண்டு கேக் தயாரிப்பதற்காக டூட்டி ஃப்ரூட்டி, பாதாம், பிஸ்தா, முந்திரி, அத்திப்பழம் உள்ளிட்ட சுமார் 20 வகையான பழங்கள், உலர்ந்த பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்களைக் கலந்து மகிழ்ந்தனர். பண்டிகை காலத்தின் துவக்கத்தை குறிக்கும் இந்நிகழ்ச்சி பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
செழிப்பு, மகிழ்ச்சி, நட்பு மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் உணர்வின் அடையாளமாக கேக் மிக்சிங் விளங்குவதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.