புதுச்சேரி

புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்க வேண்டும்: முதல்வருக்கு DPI கோரிக்கை

புதுச்சேரி, 24/10/2024: புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்விக்கடனை தாமதமின்றி உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் பாந்தர் ஆஃப் இந்தியா (DPI) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில தலித் பாந்தர் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் மா. மணிகண்டன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களது உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி படிப்புகளைத் தடையின்றி தொடர்வதற்காக அரசு நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், நடப்புக் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்விக் கடன் இன்னும் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.

மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் முதலமைச்சரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். நிலுவையில் உள்ள கல்விக் கடன்களைத் தகுதியான மாணவர்களுக்கு காலதாமதமின்றி விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன