புதுச்சேரி

புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் நீட், சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி, அக். 29:
புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) தேர்வில் சாதனை புரிந்த 20 மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு விழா பள்ளியின் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் பிரடெரிக் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். புதுவை மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைத்தலைவர் பாலமுரளி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மருத்துவ நுழைவுத் தேர்வில் வென்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும், சி.பி.எஸ்.இ. தேர்வில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளி அளவில் 10-ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த தேஜஸ்வினி, துவானி ஜெயின், ரோஷன் ஆகியோரும், 12-ம் வகுப்பில் நிவேதித்தா, நிக்ஸிதா உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிக்ஸிதா, தீபா, அட்லா தீபிகா ராக ஸ்ரவ்யா, ஹரிதா, நிவேதித்தா, அபிநயா, ரிஷிவர்மா, கௌசிகன் ஜோசர் கோஷன், திருமலைவாசன், சஞ்சனா, சண்முகப்பிரியா, ஜெயஸ்ரீ, காவியா, ஜெனிதா கெஷியா, மது நிஷா, கெவின், விக்னேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, என்.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவிகள் சுப்ரியா, ரோஷினி ஆகியோரும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பள்ளி இயக்குநர் மருத்துவர் ஜீட்டா பிரடெரிக், முதல்வர் ஸ்டெல்லா, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவை ஆசிரியை சந்தியா தொகுத்து வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன