தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

வானூர், அக்டோபர் 26: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

வானூர், கோட்டக்குப்பம், முதலியார் சாவடி, ஆரோவில், திருச்சிற்றம்பலம், தைலாபுரம், கண்டமங்கலம் மற்றும் பள்ளி புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பகல் நேரத்திலும் போதிய வெளிச்சம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டிவனம் புதுச்சேரி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

English summary: Continuous heavy rain, caused by a low-pressure area over the Bay of Bengal, has hit Vanur and nearby areas of Villupuram district, including Kottakuppam, Auroville and Kandamangalam. It was so dark that motorists crawled with headlights on along the Tindivanam-Puducherry road and East Coast Road, and flood water ran through low-lying roads and streets.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன