தேசியம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கண்டித்து நவம்பர் 1-ல் டெல்லியில் காங்கிரஸ் மாபெரும் பேரணி: விஷ்ணுபிரசாத் அறிவிப்பு

புதுச்சேரி, அக்டோபர் 26: இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி புதுடெல்லியில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் அறிவித்துள்ளார்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் துறையின் நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் விதமாக உள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் செயல்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடத்தப்படும் என்றும், இதில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநிலத் தலைவரும் எம்பியுமான வைத்தியலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன