புதுச்சேரி

வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி, நவம்பர் 7: மங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும், மாணவ மாணவிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடுகளை அதிகப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அரிசிக்கு பதிலாக ஆறு மாத காலத்திற்கான இலவச அரிசிக்கான தொகை 5,160 ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து, வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், முன்னாள் சேர்மன் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் என்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன