புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸ் சித்தாந்த துறை சார்பில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை

புதுச்சேரி, அக்டோபர் 30: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில சித்தாந்தத் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநில சித்தாந்தத் துறை தலைவர் டி. பிரதீஷ் இருதயராஜ் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், அகில இந்திய சித்தாந்தத் துறை தலைவர் கேப்டன் பிரவீண் தாவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், அனந்தராமன் உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் குறித்த குறிப்பேடு வெளியிடப்பட்டது.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் தியாகங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என அகில இந்திய சித்தாந்தத் துறை தலைவர் கேப்டன் பிரவீண் தாவர் வலியுறுத்தினார்.

English summary: The Puducherry Congress ideology wing held a consultative meeting at the party headquarters, chaired by state ideology wing head T. Pratheesh Irudayaraj, with All India ideology wing head Captain Praveen Davar as special guest. State Congress president V. Vaithilingam MP, former Chief Minister Narayanasamy and other leaders attended. The meeting discussed the activities of the central BJP government and taking Congress policies to the people, and a booklet on the party’s ideology was released.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன