புதுச்சேரி

உப்பளம் தொகுதியில் 381 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வழங்கினார்

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற 381 மாணவிகளுக்கு விலைவின்ற மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உப்பளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தற்காலிக சட்டப்பேரவை தலைவருமான அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகள் அனைவருக்கும் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கும் பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைப்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஜான் ஹில்டா, சிஸ்டர் ஜான்சி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன