புதுச்சேரி

வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளில் பேட்டரியைத் திருடிச் சென்ற மர்மநபர் சிசிடிவி காட்சிகளால் சிக்கினார்

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார்.

நள்ளிரவு சுமார் இரண்டு மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை நோட்டமிட்டுள்ளார். பின்னர் யாரும் இல்லாததை அறிந்த அவர், மோட்டார் சைக்கிளில் இருந்த பேட்டரியை லாவகமாக கழற்றித் திருடிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருவதுடன், வாகன உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன