தமிழ்நாடு
டாஸ்மா கடைகளில் பாட்டிலுக்கு ப ரூபாய் விலை உயர்வு இல்லை என அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
சென்னை, அக்டோபர் 30: டாஸ்மா கடைகளில் மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் விலை உயர்வு செய்யப்படவில்லை என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சுற்றுச்சூழல் வரியான 10 ரூபாயை மொத்த விலைக்குள் கொண்டுவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், எம்ஆர்பி விலையான 150 ரூபாயை மட்டும் கொடுத்தால் போதும் என்றும், காலி பாட்டில்களை திரும்பக் கொடுத்தால் அந்த 10 ரூபாய் வாடிக்கையாளர்களின் கையிலேயே உடனடியாக திருப்பி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். எந்தக் கடைகளில் வேண்டுமானாலும் பாட்டிலை கொடுக்கும் இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
