புதுச்சேரி
காரைக்காலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது
காரைக்கால், அக்டோபர் 31: காரைக்காலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் ஆலயம் எதிரே புதுச்சேரி மாநில தேவர் பேரவை சார்பில் தேவரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவர் பேரவை தலைவர் ஞானசிங், விமல்பேட், செயலர் சண்முகம், ஆலோசனை குழு உறுப்பினர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.