புதுச்சேரி
கோவிலில் அசுத்தம் செய்ததாக நட்டப்பாக்கத்தில் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு
புதுச்சேரி, அக்டோபர் 29: புதுச்சேரி நெட்டப்பாக்கம் ரேடியர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுறை. இவரது வீட்டின் அருகே உள்ள பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி நவராத்திரி விழாவின் போது நெட்டப்பாக்கம் அம்மாப்பேட்டை தெருவைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் தெற்கு கோபுரம் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப் மூலம் தம்பிதுறைக்கு வந்ததை அடுத்து, கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக அவர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் தினசேகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.