முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த தேசிய பழங்குடியினர் ஆணையக் குழு!

சென்னை, செப். 22:
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த முக்கியச் சந்திப்பில், தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் திரு. அந்தர் சிங் ஆர்யா, ஆணையத்தின் உறுப்பினர்கள் டாக்டர் ஆஷா லக்ரா, திரு. ஜாதோத்து ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு முதலமைச்சருடன் கலந்துரையாடினர்.
மேலும், இச்சந்திப்பின் போது ஆணையத்தின் இணைச் செயலாளர் திரு. அமித் நிர்மல் மற்றும் இயக்குநர் திரு. கல்யாண் ரெட்டி ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பு தலைமைச் செயலக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
English summary: A delegation of the National Commission for Scheduled Tribes met Tamil Nadu Chief Minister C. Joseph Vijay at the Secretariat in Chennai on September 22. It included chairman Antar Singh Arya and members Dr. Asha Lakra and Jatothu Hussain, with Joint Secretary Amit Nirmal and Director Kalyan Reddy also present.


