தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, ஆக. 23: தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், சேலம், மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மழையின் போது கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகே செல்வதைத் தவிர்க்குமாறு பேரிடர் மேலாண்மைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
English summary: The Meteorological Centre said on August 23 that heavy rain with wind is likely in 13 Tamil Nadu districts because of atmospheric circulation and convection, with thundershowers forecast in districts including Kancheepuram, Chengalpattu, Cuddalore, Salem, Madurai and Vellore. The public and motorists are advised to be careful, and the disaster management department asked people to avoid going near trees and power lines.