புதுச்சேரி

திருநள்ளாற்றில் குப்பைகளை முறையாக அகற்றாத தனியார் நிறுவனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை

காரைக்கால், அக்டோபர் 30: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றாத தனியார் தூய்மைப் பணியக நிறுவனத்திற்கு அமைச்சர் ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எச்ஆர் ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருநள்ளாறு பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்று பக்தர்கள் அமைச்சர் ராஜசேகரனிடம் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து திருநள்ளாறு பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணியை மேற்கொள்ளும் எச்ஆர் ஸ்கொயர் நிறுவன மேலாளரை அழைத்து குப்பைகளை அகற்றாதது குறித்து கேள்வி எழுப்பினார். திருநள்ளாற்றில் மீண்டும் இது போன்ற தூய்மையற்ற நிலை காணப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன