தமிழ்நாடு

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி, அக்டோபர் 29: திருச்சியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேரு அமைச்சராக இருந்தபோது பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், உயர்நீதிமன்ற அனுமதியைப் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கைப்பதிவு செய்துள்ளது.

மேலும், சென்னையில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன