புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் திருத்த பணி குறித்து எம்பி செல்வ கணபதி செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி, அக்டோபர் 28: பதவி ஆசை காரணமாக காங்கிரஸ் கட்சி ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக புதுவை பாரதிய ஜனதா எம்பி செல்வ கணபதி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி செல்வ கணபதி கூறுகையில், வாக்காளர் திருத்த பணிக்கு பின்னர் கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும், இங்கெல்லாம் வாக்கு திருட்டு நடைபெறவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி எந்த குறையும் இல்லாமல் நடைபெற்று வருவதாகவும், மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு திருட்டு என்றால் என்னவென்றே தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 2014 முதல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் காங்கிரஸ் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகவும், வரும் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி சிறப்பான வெற்றியை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி குறித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 31 ஆம் தேதி புதுச்சேரியில் பேரணி நடைபெற உள்ளதாகவும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன