தமிழ்நாடு
தேனி சிறை கண்காணிப்பாளர் நாகேஷ்வரன் பணியிட நீக்கம் – கைதிகள் தப்பியோடிய விவகாரம்
தேனி, அக்டோபர் 31: தேனி மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை வகித்து வந்த நாகேஷ்வரன் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் கைதிகள் தப்பியோடிய விவகாரத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறை நிர்வாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் மதுரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். சேலம் மத்திய சிறையில் மெத்தனமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவையில் சிறைக்கு அடைக்க அழைத்துச் செல்லப்பட்ட கைதி ராகவன் தப்பியோடிய சம்பவத்தில் அண்ணூர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.