புதுச்சேரி

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீடு

புதுச்சேரி, அக்டோபர் 29: புதுச்சேரியில் தயாரான சிங்காரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரியைச் சேர்ந்த இயக்குனர் தயாரித்து இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டார்.

தொடர்ந்து சிங்காரம் திரைப்படம் நாளை அக்டோபர் 30 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கலைமாமணி குமரன், நடிகர் சங்க நிர்வாகி ராஜ்குமார் மற்றும் திரைப்படக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன