புதுச்சேரி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் பங்களிக்க வேண்டும்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தல்

புதுச்சேரி, அக்டோபர் 29: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் முழுமையாக பங்களிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் உள்தணிக்கை 2030 என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியதாவது: தேசிய கட்டமைப்பு என்பது சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் போன்ற உள் கட்டமைப்புகளை மட்டும் சார்ந்தது அல்ல. வலிமையான நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் தொழில்முறை கலாச்சாரம் ஆகியவையும் முக்கியம். இந்தியா வளர்ச்சி அடைந்த பொருளாதார நாடாக மாறுவதற்கு அனைத்து துறையினரும் உற்பத்தி, கண்டுபிடிப்பு, நிதி மேலாண்மை மற்றும் பொறுப்பான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால தணிக்கையாளர்கள் கணக்கியல் அறிவுடன் தொழில்நுட்பத்திறன், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் நெறிமுறை தலைமை பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இளம் தொழில் வல்லுநர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவன தலைவர் சித்தாராஜன் சட்டபத்தாயாய், துணை தலைவர் மனோஜ் குமார் ஆனந்த், உள்தணிக்கை தர நிர்ணய வாரிய தலைவர் அவஜித் கோசுவாமி, தென்னிந்திய பிராந்திய குழு தலைவர் பிரவீண் குமார் மற்றும் புதுச்சேரி கிளை தலைவர் பத்மபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன