புதுச்சேரி

புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி: அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மின்சாரத் துறை சார்பில் மரப்பாலம் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வெளியேறும் 22 கே.வி உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அமராவதி மற்றும் அரியாங்குப்பம் மின் பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமராவதி மின் பாதைக்கு உட்பட்ட ஆனந்தா நகர், திருமகள் நகர், மறைமலை நகர், திருமால் நகர், வேல்ராம்பேட் பகுதி, திருப்பூர்குமரன் நகர், ரமணர் நகர், அண்ணா தெரு, சுதனா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரசா நகர், முருங்கப்பாக்கம்பேட், கமலம் நகர், பாப்பஞ்சாவடி, பாப்பஞ்சாவடி ஆசிரியர்கள் காலனி, ஒட்டம்பாளையம் மற்றும் காலனி பகுதி, கொம்பாக்கம், கொம்பாக்கம்பேட், குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், அரியாங்குப்பம் மின் பாதைக்கு உட்பட்ட கணபதி நகர், வரதராஜு நகர், மூகாம்பிகை நகர், முத்துலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், செத்திலால் நகர், நைனார்மண்டபம், ரங்கசாமி நகர், முருங்கப்பாக்கம் முழு பகுதி, கோவிந்தராஜு நகர், அரியாங்குப்பம், மணவெளி மற்றும் நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் தடைபடும்.

மின் பாதை சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் வழக்கம் போல் சீரமைக்கப்படும் எனவும், பொதுமக்கள் இந்த மின்தடை நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மின்சாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன