தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் வரும் இரண்டாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, அக்டோபர் 30: நீலகிரி மாவட்டத்தில் வரும் இரண்டாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதாகவும், இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன