கீழூர் அரசு கிளை நூலக மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.17.47 லட்சத்தில் பூமி பூஜை
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி மாநிலம் மங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழூர் அரசு கிளை நூலகத்தை மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
முதலமைச்சர் ரங்கசாமியின் ஆணைக்கு இணங்க, வில்லியனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.
கீழூர் அரசு கிளை நூலகத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்டத்தின் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 17.47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் ராஜகுமாருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், ரேவதி பர்குணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், செயற்பொறியாளர் ஸ்ரீதரன், இளநிலை பொறியாளர் மகேஷ் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நூலக மேம்பாட்டு பணிகள் நிறைவு பெறுவதன் மூலம் கீழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நூலக வசதிகளை சிறப்பாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary: A bhoomi puja was held for Rs 17.47 lakh improvement works at the Keezhur government branch library in the Mangalam constituency, Puducherry. Villianur MLA Ravikumar started the work on the Chief Minister Rangasamy’s instructions, and a work order has been issued to contractor Rajakumar. Public Works Department engineers and former chairmen were among those present.