புதுச்சேரி
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பேட்டரி திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 28ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.
அப்போது நள்ளிரவு இரண்டு மணி அளவில் டீஷர்ட், ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிந்து வந்த வாலிபர் ஒருவர், வீட்டின் முன்பு நின்றிருந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டுள்ளார். பின்னர் யாரும் இல்லாததை உறுதி செய்த அவர், அந்த வாகனத்தில் இருந்த பேட்டரியை கழற்றி திருடிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.