புதுச்சேரி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள்: புதுவையில் உருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து அஞ்சலி

புதுச்சேரி, அக்டோபர் 31: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நூறு அடி சாலை மற்றும் விழுப்புரம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் சிவகொழுந்து, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாய் சரவணகுமார், ரவிகுமார், அழகானந்தம் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சர்வமத பிரார்த்தனையுடன் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன