புதுச்சேரி
புதுவை பொதுப்பணித்துறையில் 165 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி ஆணை
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 165 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதன்படி பல்நோக்கு ஊழியர்களான 92 பேருக்கு பணி ஆய்வாளர்களாகவும், 67 மெக்கானிக் மற்றும் 6 பேருக்கு போர்மேன் எனவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவகொழுந்து மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.